Sunday, June 12, 2016

இயற்கை பூச்சி விரட்டி

[23:36, 11/6/2016] +91 80158 66792: கொல்ல வேண்டாம்...
இயற்கை பொருட்களை வைத்து ஓட.. ஓட.. விரட்டலாமே!!!

எலி, பல்லி,ஈ,
கொசுக்கள்
கரப்பான் பூச்சி,
மூட்டைப்பூச்சிகள்
வராமல் தடுக்க சில எளிய வழிமுறைகள்...

கண்டிப்பாக ஒவ்வொருவரும்
இது போன்ற கொடிய
மிருகங்களால் (பூச்சிகளாலும்)
அதிக தொந்தரவுகளை
சந்தித்திருப்போம்..

கடைகளில் விற்கும்
விலை உயர்ந்த
பொருட்களைப் பயன்படுத்தி
அவைகளை
விரட்டுவதற்கு பதிலாக,
ஒரு சில
இயற்கை பொருட்களைக்
கொண்டே,
அவற்றை எளிதில் விரட்டலாம்..

எலி :

எலிக்கு புதினாவின் வாசனை
பிடிக்காது..

எனவே,
புதினாவை
அது வரும் இடங்களில்
கசக்கிப் போட்டாலோ
அல்லது
புதினா எண்ணெய்யை
பஞ்சில் நனைத்து
எலி வரும் இடங்களில்
வைத்தாலோ,
அவை வருவதைத் தடுக்கலாம்..

பல்லி :

உங்கள் வீட்டு சுவற்றை
பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா..?

அப்படியெனில்,
வீட்டின் மூலைகளில்
முட்டையின் ஓட்டினை
வையுங்கள்..
அதன் நாற்றத்தினால்,
பல்லிகள் போய்விடும்..

ஈ :

சில வீடுகளில்
"ஈக்கள்" அதிகம் மொய்க்கும்..

அப்படி உங்கள் வீட்டில்
"ஈக்கள்" அதிகம் இருந்தால்,
துளசி செடியை
வீட்டு ஜன்னல்களில்
வைத்து வளர்த்து வாருங்கள்..

இல்லாவிட்டால்,
லாவெண்டர், யூகலிப்டஸ்
போன்ற எண்ணெய்களை
தெளித்து விடுங்கள்..

கொசுக்கள் :

கொசுக்கள் வராமல் இருக்க
வேப்பிலையை பயன்படுத்தலாம்..

கொசு விரட்டிகளை விட
வேப்பிலை மிகவும் சிறந்தது
என்று ஆய்வுகளும் கூறுகின்றன..

எனவே,
உங்கள் வீட்டில்
கொசுக்கள் அதிகம் இருந்தால்,
காய்ந்த வேப்பிலையைக் கொண்டு
தீ மூட்டுங்கள்..

அப்போது வரும் புகையினால்
கொசுக்கள் அழிந்துவிடும்..

கரப்பான்_பூச்சி :

கரப்பான் பூச்சியைக் கண்டு
பயப்படுவோர் அதிகம்..

அப்படி பயமுறுத்தும்
கரப்பான் பூச்சிகள்
வரும் இடங்களில்
மிளகுத் தூள்,
வெங்காய பேஸ்ட் மற்றும்
பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை
சிறிது நீரில் கலந்து த��
[23:37, 11/6/2016] +91 80158 66792: கரப்பான்_பூச்சி :

கரப்பான் பூச்சியைக் கண்டு
பயப்படுவோர் அதிகம்..

அப்படி பயமுறுத்தும்
கரப்பான் பூச்சிகள்
வரும் இடங்களில்
மிளகுத் தூள்,
வெங்காய பேஸ்ட் மற்றும்
பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை
சிறிது நீரில் கலந்து தெளித்தால்,
அவைகள் வருவதைத் தடுக்கலாம்..

மூட்டைப்பூச்சி :

மூட்டைப்பூச்சி
உங்கள் வீட்டின் மெத்தையில்
அதிகம் இருந்தால்,
வெங்காய சாற்றினை
தெளித்து விட்டால்,
அதன் வாசனையில்
மூட்டைப்பூச்சிகள்
அழிந்து விடும்..

பலரும் பயன்பெற
பகிருங்கள் நண்பர்களே..

இயற்கை பூச்சி விரட்டி:

விவசாயத்தில் பூச்சிகளை விரட்டும் மூலிகை பூச்சி விரட்டி ஒன்றை எப்படிதயாரிப்பது என்று பார்ப்போம்.

வேம்பு, ஊமத்தை, எருக்கு, புங்கன், நொச்சி ஆகியவற்றின் இலைகளை தலா 5 கிலோ வீதம் சேகரித்து, அவற்றை சிறு துண்டுகளாக வெட்டி, 10 லிட்டர் கோமியத்தில் 3 நாட்கள் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

காற்றோட்டமான இடத்தில் நன்றாக கலக்கி நிழலில் மூடி வைக்க வேண்டும்.

மூன்று நாட்களுக்கு பிறகு நன்கு கலக்கி வடிகட்ட வேண்டும்.

இதில் ஒரு லிட்டர் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். வாரம் ஒருமுறை இதை செய்யலாம்.

இலைகள் நொதித்து அதில் இருந்து கிளம்பும் வேதிப்பொருள் மூலம் பூச்சிகள் விரட்டப்படும். அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். முதலீடு தேவையில்லை.
மண்ணில் நச்சுத்தன்மை தங்குவதில்லை.

இதன்மூலம் இயற்கையாகவே பூச்சிகளை விரட்டலாம்,

Sunday, June 5, 2016

பசு

பசுவே உரத்தொழிற்சாலை!‘'

''ரசாயன விவசாயத்தைப் போலவே ஆர்கானிக் விவசாயத்திலும் கொடுமைகள் மலிந்திருக்கின்றன'' என்று சுபாஷ் பாலேக்கர் சொல்ல... அதிர்ந்து, நிமிர்ந்து உட்கார்ந்த கூட்டம்... காதுகளைக் கூர் தீட்டிக் காத்திருக்க... சடசடவென பொழிந்தார் பாலேக்கர்

''ரசாயன விவசாயம் வேண்டாம்... இயற்கை விவசாயம் செய்யலாம் என்று வந்தவர்களை மீண்டும், மீண்டும் கடனாளியாக்கும் வித்தையைக் கற்றுக்கொடுக்கிறார்கள் சிலர். 'யூரியா போடவேண்டாம்... மண்புழு உரம் போடுங்கள்', 'பொட்டாஷ் தேவையில்லை... ஆர்கானிக் உரம் போதும்', 'ரசாயன பூச்சி மருந்தும் ரசாயன வளர்ச்சி ஊக்கிகளும் வேண்டாம்... பஞ்சகவ்யாவையும், அதையும் இதையும் கலந்து அடியுங்கள்' என்று விவசாயிகளுக்கு மேலும் மேலும் செலவை அதிகப்படுத்துகிறார்கள். இந்தியாவில் இயற்கை விவசாயத்தின் போக்கு ஆபத்தானதாக உள்ளது. அதிலும் மண்புழு உரம் என்ற ஆபத்தை விலைகொடுத்து வாங்குகிறார்கள் விவசாயிகள்.

'ஐசெனியா ஃபெட்டிடா' என்ற மண்புழு இனத்தைத்தான் உரம் தயாரிப்பதற்காக பலரும் பயன்படுத்துகிறார்கள். இது புழு அல்ல... காளி. அடிப்படையில் மண்புழுவுக்கு 14 குணாம்சங்கள் இருக்கவேண்டும். அதில் ஒன்றுகூட இந்தக் காளியிடம் இல்லை. தீவிரவாதிகள் ஊடுருவது போல வெளிநாட்டிலிருந்து இந்த மண்புழுவை நம்நாட்டில் ஊடுருவச் செய்துள்ளனர். இது செய்கின்ற வேலையைக் கேட்டால் பலருக்கு மயக்கம் வந்தாலும் வந்துவிடும்.

ஆர்சானிக், காட்மியம், ஈயம் போன்றவை மண்ணில் இயற்கையாகவே உள்ளன. இதைத் தேடிப்பிடித்து மேலே கொண்டு வந்து சேர்க்கும் வேலையைத்தான் 'மண்புழு' என்று பலராலும் சொல்லப்படும் இந்தக் காளிகள் செய்கின்றன. மண்புழு உரம் வழியாக பயிருக்குச் செல்லும் இந்த கடின உலோகங்கள், மனித உடம்பில் கலந்து விடுகின்றன. இதனால் புற்றுநோய் உருவாகிறது. எனவே, ரசாயன விவசாயமும், ஆர்கானிக் விவசாயம் என்று சிலரால் சொல்லப்படும் இயற்கை விவசாயமும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல. இதனால், விவசாயிகளின் இடுபொருள் செலவுகள் குறைந்தபாடில்லை
.
ஒரு மூட்டை யூரியா ரூ. 280. ஆர்கானிக் உரம் ஒரு மூட்டை ரூ 600. ஒரு லிட்டர் என்டோசல்பான் ரூ 250. உயிர் பூச்சிக்கொல்லி 1 லி ரூ. 1,500. இப்படி இடுபொருட்கள் விலையை அதிகமாக வைத்து விற்று, அதன் காரணமாக புதிதாக பல பிரச்னைகள் கிளம்பும் வகையில்தான் இந்த ஆர்கானிக் பரப்பப்பட்டுள்ளது'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்ன பாலேக்கர் தொடர்ந்தார்...

தாயைப் பரிசோதிப்பதா..?

''இந்தப் பிரச்னைகள் எதுவும் வேண்டாம். காசு வேண்டாம். ஆள் வேண்டாம். அம்பு வேண்டாம்... அத்தனை பிரச்னைகளிலிருந்தும் உங்களை தப்பிக்க வைக்கும் சக்தி ஜீரோ பட்ஜெட்டுக்கு உண்டு. முப்பது ஏக்கரில் காய்கறி, பழம், மரம் என்று எதை வேண்டுமானலும் சாகுபடி செய்யுங்கள். உங்களுக்கு ஒன்றே ஒன்றுதான் தேவை... அது, நாட்டுப் பசுமாடு. இப்போது பாசனத்துக்காக நீங்கள் பயன்படுத்தி வரும் நீரில் 10% போதும். முதல் வருடத்தில் இருந்தே முழுபலனும் பெறலாம்.

ஒரு பசு மாட்டை வைத்துக்கொண்டே ஒரு ஏக்கரில் 60 டன் கரும்பு வெட்ட முடியும். ஏக்கருக்கு 24 குவிண்டால் நெல் மகசூல் பெறலாம். எந்தவித இடுபொருட்கள் செலவும் இல்லாமல் இதைச் சாதிக்கமுடியும். இதற்குக் கொஞ்சம் அறிவியல்பூர்வமாகச் சிந்தித்தால் போதும்.

மண்ணில் சத்துப் பற்றாக்குறை உள்ளது. மண்பரிசோதனை செய்யவேண்டும் என்கிறார்கள். தன் தாயை யாராவது கற்பு உள்ளவர்தானா என்று பரிசோதனை செய்வார்களா? என்ன முட்டாள்த்தனமான செயல்.

 பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சொல்வதைப் போல மண்ணை எடுத்து நான்கு ஆய்வு கூடத்துக்கு அனுப்பினோம். ஒவ்வொரு இடத்திலிருந்தும் தாறுமாறான முடிவுகள் வந்தன. இதுதான் அவர்கள் ஆராய்ச்சி செய்யும் லட்சணம். 'ஒன்பது அங்குல ஆழத்தில் மண் எடுங்கள்' என்கிறார்கள். பயிரின் வேர் நாலரை அடி, ஐந்தரை அடி ஆழத்தில் இருக்கிறது. இந்த ஆழத்தில் பயிருக்குத் தேவையானச் சத்துக்கள் இயற்கையாகவே உள்ளன. இதைத் தெரிந்து கொள்ளாமல் மண்ணை பரிசோதனை செய்... மாவை பரிசோதனை செய்... என்கிறார்கள்.

பயிர்கள், அந்த விஞ்ஞானிகளைக் காட்டிலும் புத்திசாலிகள். மூன்று விதமான வேலையை அவை திறம்பட செய்கின்றன. முதலாவது... புவிஈர்ப்பு சக்தி. வானத்தில் இருந்து விழும் மழைத்துளியை இந்த சக்தியின் மூலம் இழுத்துக் கொள்கின்றன.

இரண்டாவது... கீழே இருந்து மேலே செல்கின்ற சக்தி. இதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்களை வேர்கள் அருகே கொண்டுவந்து சேர்க்கின்றன. 25 அடி ஆழத்தில் சத்துப் பொருட்கள் இருந்தாலும் மேலே கொண்டு வரும் சக்தி இயற்கைக்கு உண்டு. அப்புறம் எதற்கு நுண்ணூட்டச்சத்து போடவேண்டும்?

எந்தத் தாயும் குழந்தையைப் பட்டினி போடமாட்டாள். இயற்கையும் அப்படித் தான். பயிரை நோய், நொடியில் எப்போதும் அது தள்ளாது. நாம்தான் அவற்றை ஆபத்தில் தள்ளி விடுகிறோம்.

 மூன்றாவது... கட்டுப்படுத்தும் சக்தி. பயிர் ஆரோக்கியமாக வளர இது உதவுகிறது.
பயிர்களின் உற்றத் தோழனாக நாட்டு மண்புழுக்கள் உள்ளன. 15 அடிக்கு கீழே வாழும் வல்லமை பெற்றவை இவை. ஆழத்தில் உள்ள நுண்சத்துக்களை மேலே கொண்டுவந்து சேர்க்கின்றன. மேலும் கீழுமாக இவைகள் ஏற்படுத்திய ஓட்டைகளில் மழைநீர் மண்ணுக்குள் இறங்குகின்றன. இவற்றின் கழிவுகள், நீருடன் கலந்து பயிருக்கு ஊட்டம் அளிக்கின்றன.

இலை, தழை, மண், சுண்ணாம்பு போன்றவையும் பயிருக்கு நோய் தரக்கூடிய நுண்ணுயிர் களும்தான் நாட்டு மண்புழுக்களுக்கு உணவு.
இப்புழுக்களின் கழிவில் 7 மடங்கு தழைச்சத்து உள்ளது. 9 மடங்கு மணிசத்து இருக்கிறது. சாம்பல் சத்து 11 மடங்கு உள்ளது. இன்னும் மக்னீஷியம், கந்தகம்.... என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அப்புறம் எதற்கு மற்ற உரமெல்லாம்? இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், நாட்டுப்பசுமாட்டுச் சாணத்தில்தான் நாட்டு மண்புழுக்கள் பலமடங்கு பெருகுகின்றன. இந்தச் சாணத்தின் வாசனையைக் கண்டவுடன் 15 அடி ஆழத்தில் இருந்துகூட மண்புழுக்கள் மேலே வந்து விடுகின்றன.

 சீமைப்பசுக்களின் சாணத்தை, மண்புழுக்கள் தொடுவதே இல்லை'' என ஆணித்தரமாக அவர் சொன்னது விவசாயிகளை ஈர்த்தது. இதை தன்னுடைய ஆராய்ச்சி மூலமாக கண்டறிந்ததை அடுத்து விவரித்தார்.

பசுவே உரத்தொழிற்சாலை!

''என்னுடைய ஆராய்ச்சியின்படி ஒரு ஏக்கருக்கு, மாதம் ஒன்றுக்கு நாட்டுமாட்டுச் சாணம் 10 கிலோ போதும். ஆரம்பத்தில் 1,000 கிலோ வரை கூட பயிருக்குப் போட்டுப் பார்த்தேன். பின்பு 700, 500, 400, 200, 100 என்று கடைசியில் 10 கிலோ போதும் என்று முடிவு செய்தேன்.
பாலைத் தயிராக்க கொஞ்சம் பிறைமோர் ஊற்றுவது போலத்தான் 10 கிலோ சாணம். இதைப் போட்டவுடன் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகுகின்றன. விதைப்பதற்கு முன்பு 100 கிலோ பண்ணை உரம் போட்டால் இன்னும் வேகமாக நுண்ணுயிர்கள் வளரும். அகில உலகத் துக்கும் இந்த அளவு பொருந்தும்.

பசு மாட்டை நாம் இதுவரை பால் கொடுக்கும் ஜீவனாகத்தான் பார்த்து வந்துள்ளோம். அது அற்புதமான உரத்தொழிற்சாலை. பயிர்களுக்கு வேண்டிய நுண்ணுயிர்கள் பசுமாட்டின் வயிற்றில்தான் உற்பத்தியாகின்றன. கரும்பு போடும்போதும், காய்கறி பயிரிடும்போதும் பாஸ்பேட் உரம் போடுகிறோம். இந்த பாஸ்பேட், பயிர்களின் வேர்களால் உட்கிர கிக்கும் வகையில் இருக்காது. இதைச் சமைத்து பயிர்கள் எடுத்துக் கொள்ளுமளவுக்குப் பக்குவப் படுத்தி கொடுக்கிறது பாஸ்பேட் சாலிபலஸ் பாக்டீரியா. இந்தப் பாக்டீரியா, பசுமாட்டின் குடலில் வசிக்கிறது. இனி, பாஸ்பேட் உரம் போடவேண்டாம்... பசு மாட்டைத் தேடுங்கள்'' என்று கிளப்பிவிட்டவர், அடுத்து சவால் விடவும் தவறவில்லை.
சவாலுக்குத் தயாரா?

''நான் சவால் விடுகிறேன்! சாதாரணமாக நிலத்தில் எப்போதுமே பாஸ்பரஸ் சத்து குறைபாடு இருக்காது. உரமூட்டையை விற்கத்தான் 'சத்துப் பற்றாக்குறை' என்று பொய் சொல்கிறார்கள் விவசாய விஞ்ஞானிகள். ஐயா விஞ்ஞானிகளே... எந்த நிலத்திலாவது பாஸ்பரச் சத்து இல்லை என்று நிரூபித்துக்காட்டுங்கள் பார்க்கலாம்'' என்று சொல்லி கைத்தட்டல்களை அள்ளியவர்,

''சாம்பல் சத்துக்களை உண்டாக்கும் பேசிலஸ் சிலிகா என்ற நுண்ணுயிர், நம் பசு மாட்டின் வயிற்றுப் பகுதியில் வாழ்கிறது. அப்புறம் தழைச்சத்து. இதை தருகின்ற அசோஸ்பைரில்லம் கூட மாட்டின் வயிற்றில் உள்ளது. அப்புறம் கந்தகம், இரும்பு, மாங்கனீசு... என்று பயிருக்கு எத்தனை விதமான நுண்சத்துக்கள் வேண்டுமோ அத்தனையையும் மைக்கோரைசா என்ற உயிரி உருவாக்குகிறது. இதுவும் பசுவிடம் உள்ளது.

பசுவைக் காமதேனு என்றும் சொல்வார்கள். அதற்குப்பொருள், நாம் விரும்பியதை எல்லாம் தரும் என்பார்கள் இதோ... பயிருக்கு வேண்டிய அத்தனைச் சத்துக்களையும் உற்பத்தி செய்யும் உரத் தொழிற்சாலை, சாதுவாக நிற்கிறது பசு. அதைப் பயன்படுத்திக்கொள்ள முன்வாருங்கள்'' என்று அவர் அழைப்பு வைத்தபோது மாலை முடிந்து இரவு கவிய ஆரம்பித்திருந்தது. காலை 10 மணிக்கு தொடங்கியக் கூட்டம்... இரவு 8 மணியைத் தாண்டியும் நீள... கொஞ்சம் கூட சளைக்காமல் முழங்கினார் பாலேக்கர்...

கூட்டமும் அசரவில்லை.
ஜீரோ பட்ஜெட்டின் முக்கியமான சூத்திரங்களை அடுத்து விவரித்த பாலேக்கர், 'மூன்று ஆண்டுகளில் தமிழகத்தையே யாருடைய உதவியும் இல்லாமல் நாம் மாற்றிவிட முடியும்' என்றும் சூளுரைத்தார்.

தொகுப்பு : வானக வானம்பாடிகள் முகநூல் குழு.

Wednesday, June 1, 2016

மரம்

வளப்படுத்தும் விருட்சங்கள்:

வரம் தருவதால் அது தாவரம் எனப்பட்டது. விருத்தி அடையச் செய்வதால் அதற்கு விருட்சம் என்று பெயர்.

கோயில்களில் வளர்க்கப்படுகின்ற சில தெய்வீக விருட்சங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

கொன்றை மரம்:
சரக்கொன்றை என்ற பெயரில் அழைக்கப்படுகிற இந்த மரத்தை அமாவாசையன்று பூஜை செய்து வந்தால் துஷ்ட சக்திகளின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.

மகிழ மரம்:
இந்த மரம் திருவண்ணாமலை கோயில் மரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தெய்வ மரத்தை வீட்டில் வளர்த்து வந்தால், குழந்தைகள் அதன் காற்றைத் தொடர்ந்து சுவாசித்து வர அறிவு வளரும் என்று சொல்வர்.

பன்னீர் மரம்:
இந்தப் பன்னீர் மரம் திருச்செந்தூர் கோயில் மரம் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த மரத்தை வீட்டில் வளர்த்து அதன் அருகில் வாகனங்களை நிறுத்த, விபத்துகள் நடக்காமல் பாதுகாக்கப்படும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமை மற்றும் திரயோதசி திதி நாளில் இந்த மரத்துக்குப் பூஜை செய்யலாம்.

குறுந்த மரம்:
வாஸ்து குறைகளால் வீட்டில் அசம்பாவிதங்கள், தடைகள் ஏற்படுவதாக உணர்ந்தால் இந்த விருட்சத்தின் வேரை வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாளில் முறைப்படி பிராணப் பிரதிஷ்டை செய்து நடு அறையில் கட்டி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பும்ஸிக மரம்:
சந்தான பாக்யத்தைத் தருகிற இந்த தெய்வ விருட்சத்தை வீட்டில் வளர்த்து வந்தால் பிள்ளைப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை. இதன் காற்று படும்படி மரத்தைச் சுற்றிவர வேண்டும்.

அரிசந்தன மரம்:
திருவோண நட்சத்திர நாளில் புதன், சனிக்கிழமைகளில் இந்த மரத்தை வழிபட்டுவர தீமைகள் விலகி, நன்மை சேரும் என்று சொல்வார்கள்.

பரிசாதகம்:
அனுமன் மரம், சிரஞ்சீவி மரம் என்ற பெயர்களுடைய இந்த மரத்தை வீட்டில் வளர்த்து வழிபட்டால் நீண்ட ஆயுள் கிட்டும் என்பது ஐதீகம். அமாவாசை மூல நட்சத்திர நாளில் இந்த மரத்தைக் குழந்தைகள் வழிபட்டு வர ஆயுள் விருத்தியடையும் என்பது நம்பிக்கை.

மந்தாரக மரம்:
வெள்ளை மந்தாரை என்ற மலரைத் தருகிற இந்த விருட்சத்தை செவ்வாய், சனி ஏகாதசி தினங்களில் வழிபட்டால் மனதில் எண்ணிய நல்ல செயல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கேட்டதைத் தரும் கல்பதரு என்றும் இந்த மரத்தைச் சொல்வார்கள்.

பின்னை மரம்:
திருமண விருட்சம் என்ற அபூர்வமான இந்த மரத்தைத் திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் வெள்ளி, பவுர்ணமி ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றி வந்து வணங்கி, கையில் காப்புக் கட்டிக்கொண்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.

கருநெல்லி மரம்:
திருமகள் வாசம் செய்வதாகக் கூறப்படும் இந்த மரத்துக்கு லட்சுமி மரம் என்ற பெயரும் உண்டு. வளர்பிறை அஷ்டமி, பூர நட்சத்திரம், பவுர்ணமி நாளில் வழிபட்டால் வறுமை நீங்கி, வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

செண்பக மரம்:
சௌபாக்ய விருட்சம் என்ற சாஸ்திரப் பெயரைக் கொண்டிருக்கும் இந்த மரத்தை வீட்டில் வளர்த்து செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு வந்தால் வளங்கள் சேரும் என்பது ஐதீகம்.

பிராய் மரம்:
மின்னலைத் தாக்கும் விருட்சம் என்ற பெயரும் இந்த மரத்துக்கு உண்டு. தொழிற்சாலை வைத்திருப்போர் முன்பகுதியில் இந்த மரத்தை வளர்த்தால் 5 கி.மீ சுற்றளவுக்கு இடி தாக்காது என்று சொல்வார்கள்.

திருச்சி திருப்பராய்த்துறை சிவாலயத்தில் தல விருட்சமாக ஒரு மரம் மட்டுமே உயிர்வாழ்கிறது. பிராய் மரங்கள் நிறைந்திருந்ததால் திருப்பராய்த்துறை என்ற பெயர் நிலைத்தது.

Best courtesy: www.tamil.thehindu.com

நன்றி:  ஸ்ரீ புகழேந்தி
++++++++++++++++++++++++